மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி
சென்னை மாநகரின் பிரதான சிவஸ்தலம், தேவார பாடல் பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் ஏழு சிவ தலங்கள் உள்ளன, இந்த கோவில்கள் அனைத்தும் திருமயிலை சப்த ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை கபாலீஸ்வரர் கோயில், வெள்ளீசுவரர் கோயில், காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், விருபாட்சீசுவரர் கோயில், வாலீசுவரர் கோயில், மல்லீசுவரர் கோயில் ஆகியவை ஆகும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார்.
அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.
கபாலீஸ்வரர்
கற்பகாம்பாள்
விநாயகர்
முருகப்பெருமான்
சண்டிகேஸ்வரர்