திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்
திருக்கயிலாயத்திற்கு நிகரான தலம்
தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோவில்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் பிரம்மநாயகி. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
திருக்கயிலாயத்திற்கு நிகரான தலம்
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீசுவரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும்.
தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோவில்
இங்கு சிவபெருமான் பிரம்மாவின் தலையெழுத்தை மாற்றியதாக ஐதீகம்.அதனால் இக்கோவிலுக்கு தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோவில் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் வழிபடலாம். இங்கு பிரம்மனுக்கு 6 அடி உயர சிலை உள்ளது.
பிரம்மன் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா. இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரம்மா இவர்தான். இவருக்குத் தலை முதல் பாதம் வரை 'மஞ்சள் காப்பு' செய்யப்படுகிறது.
பிரம்மன் வழிபட்ட 12 சிவலிங்கங்கள் இங்குள்ள தீர்த்தக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன. பிரம்மன் வழிபட்ட 12 சிவலிங்கங்கள் இங்குள்ள தீர்த்தக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
இக்கோவிலில், பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.
தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் கோவில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.
பிரம்மன்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது.