சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
இரவு அர்த்தஜாம பூஜை செய்த அர்ச்சகர் மறுநாள் நடை திறக்கக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் நடைமுறை
சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாலான அபூர்வ வெள்ளை நிற நந்தி
நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சுசீந்திரம் தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று. இன்றும் தினமும் நள்ளிரவில் இந்திரன் வந்து தாணுமாலயனை பூஜிப்பதாக ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில், தினமும் நள்ளிரவு பூஜை (அர்த்தஜாம பூஜை) மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இப்போதும் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் இந்திரன் நேரில் வந்து இங்குள்ள இறைவனுக்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.
இந்திரன் பூஜை செய்வதால், ஒரு நாள் இரவு அர்த்தஜாம பூஜைக்கான பொருட்களைச் சேகரித்து வைக்கும் அர்ச்சகர், மறுநாள் காலை நடையைத் திறக்கக் கூடாது என்ற வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுவாக சிவன் கோவில்களில், கருங்கல்லாலான கருப்பு நிற நந்தியைத் தான் நாம் தரிசித்து இருப்போம். ஒரு சில கோவில்களில் தான் வெள்ளை நிறத்திலான, சுதையாலான நந்தியை நாம் பார்க்க முடியும். இக்கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மிகப் பெரிய வெள்ளை நிற நந்தியை நாம் காணலாம். இந்த நந்தியானது 13 அடி உயரமும், 21 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி வெள்ளை நிற சுண்ணாம்பு, சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்திகளில், இந்த நந்தியும் ஒன்றாகும்.
நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது